சர்க்கார்.. இலவசம்.. சர்ச்சை

நல்ல வேளை இந்தப் படத்தின் மூலம் இந்தப் பொதுவிவாதம் எழுப்பப்பட்டது. கடந்த 15, 20 வருடங்களாக நிகழ்ந்துகொண்டிருக்கிற இந்த ‘இலவசம்’ சர்ச்சையை கொஞ்சம் ஆராயக்கிடைத்ததில் மகிழ்ச்சி.

‘சர்க்கார்’ திரைப்படத்தில் இதைச் சொன்னவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். தொலைக்காட்சி விவாதங்களில் வாதிட்டவர்கள்கூட இதை, இதிலுள்ள ஒரு முக்கியமான அம்சத்தை உறுதிப்படப் பேசவில்லை.

காமராஜர் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்த, பின் எம். ஜி. ஆர். அதை முழுமையாக்க, தமிழ்நாட்டு ஏழைமாணவச் சமுதாயத்தின் நற்காலம் தொடங்கியது. பின்பு காலணி, சீருடை, பள்ளிப் பைகள், புத்தகங்கள், சைக்கிள், பஸ் பாஸ் என்றாகி, இன்று Laptop வரை வந்திருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் இலவசக் கல்வி, கூடவே இந்த இலவசங்கள் எல்லாமாய் சேர்ந்து பள்ளிசெல்வோர் எண்ணிக்கைப் பலமடங்கு உயர்ந்தது. அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரத்தொடங்கியது. சந்தேகமே இல்லை!

வளர்ந்த நாடுகள் பெரும்பாலானவைகளில் மாணவர்களுக்கு பலப்பல இலவசச் சலுகைகள் உண்டு. அவர்கள் இதை அரசாங்கத்தின் கடமையாகக் கருதிச் செய்கிறார்கள். இங்கும் இதை எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் செய்தாகவேண்டும்.

இது இல்லாமல் “அந்த” மிக்ஸி, கிரைன்டர், டீ. வி. போன்றவற்றை வழங்குவதும், அதைத் தேர்தல் கவர்ச்சி அறிவிப்பாகவும் செய்யும்போதுதான் பிரச்சனை எழுகிறது. கல்வி சம்பந்தப்பட்ட இலவசங்கள் அரசுகளின் கடமை. மற்றவை கவர்ச்சி அம்சம் மட்டுமே. இரண்டு காரணங்கள்.

ஒன்று, சில ஆயிரம் மதிப்புள்ள, தரமற்ற, ஆயுசுக் குறைவான இந்தப் பொருட்களை ஒருமுறை வழங்குவதால் எந்த ஏழையின் வாழ்க்கை நிலையும் மாறியதில்லை, மாறிவிடப்போவதுமில்லை.

இரண்டு, தேர்தலில் ஒரு வேட்பாளரை அவர் பின்னணி, தகுதி, திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டிய வாக்காளர்கள், மாயமான ‘இலவச’ லஞ்சக் காரணங்களால் தீர்மானிக்கச் சோதிக்கப்படுகிறார்கள்.

ஓட்டு போடக் காசு கொடுப்பதும், பொருட்களைக் கொடுப்பதும் ஒன்றுதானே. தேர்தலுக்கு முன்னே கொடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை, அதனால் அதை கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்து, பின்னே வழங்குகிறீர்கள். இதைத்தான் தவறு என்கிறோம். இது உங்களுக்கும் தெரியும். இருந்தாலும், இதைச் சுட்டிக்காட்டும்போது, ஏழைகளுக்கு எதிராக நாங்கள் பேசுவது போல நீங்கள் திரிப்பது உங்கள் வழக்கமான அரசியல் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

கல்வி இலவசங்களை மாணவச் சமுதாயத்திற்கு வழங்கவேண்டியது உங்கள் கடமை. ஆனால் ஏழை வர்க்கத்துக்கு, ஒன்றுத்துக்கும் ஆகாத பொருட்களை வழங்கி ஏய்ப்பதும், அதை தேர்தல் தந்திரமாகவும் பயன்படுத்துவதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் வாழ்வு நிரந்தரமாக சிறக்கும்படியான திட்டங்களைத் தீட்டி அதை நடைமுறைப்படுத்தும் வழிகளைச் சிந்தியுங்கள். நாங்கள் உங்களை மனதார வாழ்த்துவோம், கூடவே பலமாய் நிற்போம்!

 

 

Advertisements

#MeToo

#MeToo குரலில்லாத, பாதிக்கப்பட்டப் பெண்களூக்குக் குரலைக் கொடுக்கிற உலகளாவிய எழுச்சி. சரியான சமூகத்தால் இதைச் சரியானத் திசையில் கொண்டுசெல்ல உதவமுடியும். ஆணாதிக்கப் பார்வையில் இதைப் பார்க்க, விமர்சிக்கத் தொடங்கினால், பாதிக்கப்பட்டவர்களின் அவலத்தை அது இன்னும் ரணப்படுத்திவிடும். முந்தைய நிலையை விட பிந்தைய நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

இதில் தனிப்பட்டவர்களை விட ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு, செய்தியாளர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. அதை அவர்கள் மனசாட்சியோடு, நடுநிலையோடு, பொறுப்போடு கையெடுத்தால் ஆரோக்கியமான சமூகச்சூழல் உருவாகும். எளிமையாகச் சொன்னால் அவர்கள் குடும்பப் பெண்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்படும். பள்ளியிலோ, கல்லூரியிலோ, அலுவலகங்களிலோ, வெளியிடங்களிலோ இன்றைக்குப் பெண்களுக்கு (அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும்தான்) தனிமையில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிற துன்புறுத்தல்கள் நிச்சயமாகக் குறையும்.. குறையத் தொடங்கும்.

நேற்று சின்மயி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் சில பெண்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சில பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டதைப் பார்த்தபிறகு பயமே வரத்தொடங்கிவிட்டது. ‘Insensitive’ என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் தெரியவில்லை. கூர் உணர்வின்மை, நுண்ணுணர்வின்மை என்பதெல்லாம் போதவில்லை. ஆனால் அதை அங்கே வெட்டவெளிச்சமாகப் பார்க்கமுடிந்தது. சிலர் கேட்ட நெடுங்கேள்விகளும், அவர்களின் ஆவேசத் தொனியும், கேட்ட கேள்விகளுக்கு அப்பெண்கள் விளக்கம் சொல்ல வந்ததைக்கூடச் சொல்லவிடாமல் இவர்கள் நீண்டப் பிரசங்கம் செய்து அவர்களை வெறுப்பேற்றிக்கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கத்தின், மத ஜாதி துவேஷத்தின், இனவெறியின் வெளிப்பாடாய் இருந்தது. சமீபகாலமாய் புதியக் கலாச்சார எழுச்சியின் மூலமாய் இந்திய, சர்வதேச கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிற தமிழினத்திற்கு அது களங்கமாய் அமைந்தது.

நம் வீட்டுப் பெண்கள் (மனைவி, சகோதரி, மகள்) இப்படிக் கதைகளையெல்லாம் நம்மிடம் சொன்னதில்லை என்பது அவர்கள் இன்னும் நம்மிடம் அவற்றைப் பகிரவில்லை என்கிற உண்மையையும் உள்ளடக்கி இருக்கிறது. அதனால், இது ஏதோ மற்றவர் பிரச்சனை மட்டுமே என்பது போலெல்லாம் கற்பனை செய்துகொள்ளக் கூடாது.

National Crime Records Bureau 2016 அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள்/ன். இது வெளியே தெரிகிற, சொல்லத் துணிந்தவரின் எண்ணிக்கை. சொல்லப்படாதவைகளில் நாமெல்லாம் அடங்குகிறோம். இதைப் படிக்கிற பலருக்கு அவர்கள் இளவயது சம்பவங்கள் நினைவுக்கு வரும். அதை மறந்து, ஒன்றுமில்லாததாக ஒதுக்கிவிட முடிகிற சிலர். முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து அஞ்சி, மறைத்து வாழ்பவர் பலர்.

பணியிடங்களில், உயர்பதவிகளில் இருப்பவர்களால் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், இன்று நேற்றல்ல, காலங்காலமாய் நடந்துகொண்டுதான் வருகின்றன. ஆனால் வரவர எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது. தங்கள் தொழிலையும், எதிர்காலத்தையும், குடும்ப சூழ்நிலையையும் கருதி பண்டமாற்று முறையில் அவர்களுக்கு இணங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அவை சுவர்களுக்குள் அடங்கிப்போகிற கதைகள். அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பொங்குகிறார்கள். இதுதான் இந்த #MeToo. இதை எதிர்க்கிறவர்கள் பெரிய வாய்ப்புகளையும், தொழில் கனவுகளையும் இழந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் ஈனபுத்தியுள்ள சில பெரிய மனிதர்கள் என்பதால் அப்பெண்களின் கோபம் இரட்டிப்பாகிறது.

தொழிலையும், காமத்தையும் இணைக்கிறவர்களால் வருகிற பிரச்சனை இது. தன் அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ வைத்துப் பெண்சுகத்தைப் பெறநினைப்பது ஆண்மை இல்லையே. முடிந்தால் உன் அழகால் அவளை வசீகரி; ஆண்மையால் அவளைக் கவர்; அல்லது அவளிடம் முன்மொழி. ஏற்றுக்கொண்டால் அவளை அடை, அல்லது ஒதுங்கு. உடல், பண, அதிகார வலிமையால் தன்னைவிட இளைத்தப் பெண்ணை மிரட்டி,  ஆசைகாட்டி, கைம்மாறாக ஏதாவது செய்து அவளை அடைய நினைப்பதுக் கேவலமில்லையா?

விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொன்று, வேட்டையாடியும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி, சார்ந்து உயிர்வாழும் கோட்பாட்டில்தான் இவ்வுலகம் படைக்கப்பட்டிருக்கிறது. அதை மீறும் ஒவ்வொரு மனிதனுமே மிருகந்தான். இந்தச் சமூகத்தில் ஒன்றிவாழத் தகுதியற்றவன். அப்படிப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் செயல்பாட்டில் ஒரு பகுதிதான் #MeToo.

இயன்றவரை இந்த எழுச்சிக்குத் துணையாக நிற்போம்! குறைந்தபட்சம் அவர்களை விமர்சன வேட்டையாடுவதையாவது தவிர்ப்போம்!

 

 

 

 

‘ஸீனி’ or ‘சீனி’?

தமிழில் சில எழுத்துகளின் இருவகை உச்சரிப்பில் பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. எனக்கும் இருந்தன. என் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளுகிறேன்.

‘க’ எழுத்து, ‘ரம்’ என்ற சொல்லில் ஒருமாதிரியும், ‘மரம்’ என்ற சொல்லில் வேறுமாதிரியும் ஒலிக்கும்.

‘ச’ எழுத்து, ‘சேறு’ என்ற சொல்லில் ஒருமாதிரியும், ‘பாம்’ என்ற சொல்லில் வேறுமாதிரியும் ஒலிக்கும்.

‘ட’ எழுத்து, ‘மாரம்’ என்ற சொல்லில் ஒருமாதிரியும், ‘கட்ம்’ என்ற சொல்லில் வேறுமாதிரியும் ஒலிக்கும்.

‘த’ எழுத்து, ‘ரம்’ என்ற சொல்லில் ஒருமாதிரியும், ‘ஆரவு’ என்ற சொல்லில் வேறுமாதிரியும் ஒலிக்கும்.

‘ப’ எழுத்து, ‘பால்’ என்ற சொல்லில் ஒருமாதிரியும், ‘கம்ம்’ என்ற சொல்லில் வேறுமாதிரியும் ஒலிக்கும்.

“இந்தக் குழப்பமும், பிரச்சனையும் வல்லின எழுத்துகளால் மட்டுந்தான் வரும். (க, ச, ட, த, ப)

மொழி இலக்கணத்தில் தமிழ் எழுத்துகளை எங்கு எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தொல்காப்பியம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் இலக்கணச் சொற்களையெல்லாம் சொல்லி உங்களைக் குழப்பவோ, வெறுப்படையவோச் செய்யப்போவதில்லை. இந்த விஷயத்துக்கு என்ன தேவையோ அதைமட்டும் சொல்லி விட்டுவிடுகிறேன்.

இயல்பு ஒலி, அதிர்வு ஒலி, உரசு ஒலி என்று மூன்று வகையுண்டு. தமிழில் உள்ள உயிர்மெய்யெழுத்துகளைச் சொல்லச்சொன்னால் எந்த உச்சரிப்போடு சொல்வோமோ, அதுதான் இயல்பு ஒலி.

(உ-ம்) , ங, , ஞ, , ண, , ந, , ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரே இலக்கண விதி:                                                            இந்த எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது, அதை இயல்பு ஒலியாக மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

‘கனம்’ என்னும் சொல்லை நாம் பொதுவாக ‘Ganam’ என்கிறோம். ஆனால் ‘க’ முதல் எழுத்தாக வருவதால் அதை ‘Kanam’ என்றுச் சொல்வதேச் சரி. (கம்பீரம் – Kambeeram, கவுரவம் – Kavuravam)

‘சரம்’ என்பதை ‘Saram’ என்கிறோம். ஆனால் ‘ச’ முதல் எழுத்தாவதால் ‘Charam’ எனச் சொல்லவேண்டும். (சாவு – Chaavu, சிரம் – Chiram, சீனி – Cheeni, சாம்பல் – Chaambal)

‘தனம்’ என்பதை Dhanam எனாமல், Thanam எனவேண்டும். (தைரியம் – Thairyam, தரிசனம் – Tharisanam)

‘பாரம்’ என்பதை Baaram எனாமல், Paaram எனவேண்டும். (பலம் – Palam, பயம் – Payam)

*இந்த எழுத்துகள் சொற்களின் இடையிலோ, இறுதியிலோ வரும்போது எப்படி வேண்டுமானாலும் ஒலிக்கலாம்.

‘கள்’ சமாச்சாரம்!

எழுத்துத் தமிழில் நம் எல்லோருக்குமே பல சந்தேகங்கள் உண்டு. எல்லாருக்கும் எல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவருடன் பகிர்வதுதான் ‘அறிவுப் பகிர்தல்’ Knowledge sharing. அப்படி ஒன்றுதான் இது.

‘வாழ்த்துக்கள்’ சரியா, ‘வாழ்த்துகள்’ சரியா? பலருக்கு இந்த ஐயப்பாடு உண்டு. இதைபோன்றப் பலச் சொற்கள் உள்ளன. அடிப்படையை விளங்கிக் கொண்டால் இந்தப் பிரச்சனையே வராது. இதை என்னால் இயன்ற அளவுக்கு விளக்க விரும்புகிறேன்.

‘கள்’ தெரியுமல்லவா? குடிக்கிற அதே பானத்தைப்பற்றித்தான் கேட்கிறேன். பனங்கள், தென்னங்கள். அதைக் குறிக்கிற இடத்தில் மட்டுந்தான் ‘க்‘ வரும். அதாவது ஒருமரத்துக்கள், பலமரத்துக்கள் என்று இந்த கள்ளைக் குறிக்கிற சொல்லில் மட்டுந்தான் அந்த ‘க்‘ என்கிற ஒற்று வரும். மற்றபடி நாம் பன்மையாகக் குறிப்பிடுகிற சொற்களில் இந்த ‘க்’ வராது.

(உ-ம்) வாழ்த்து – வாழ்த்துகள், பாட்டு – பாட்டுகள், வீடு – வீடுகள், நாடு – நாடுகள், ஏடு – ஏடுகள், துப்பு – துப்புகள், மெட்டு – மெட்டுகள், துட்டு – துட்டுகள், படிப்பு – படிப்புகள், ஆசை – ஆசைகள்.

பி. கு.  ‘வாழ்த்துக்கள்’ என்று எழுதினால் அதற்கும் ஒரு பொருள் உண்டு. ‘வாழ்த்திக் கொடுக்கப்பட்டக் கள்’, அல்லது ‘வாழ்த்துவதற்காகக் கொடுக்கப்படுகிறக் கள்’ என்று அர்த்தம்.

‘பாட்டுக்கள்’ என்று எழுதினால் ‘பாடிக் கொடுக்கப்பட்டக் கள்’, அல்லது ‘பாட்டில் வரும் கள்’ என்று அர்த்தம்.

கள் போதும் என்று நினைக்கிறேன்.

Gospel Music is NOT Entertainment!

(A Christian discourse)

எந்தத் தவறும் (பாவமும்) முதல்முறைதான் குத்தும். இரண்டாவது முறை சகஜமாகி விடும். பின்பு பழக்கமாகிவிடும். இது நாம் எல்லாருமே உணர்ந்ததுதான். பிறகு ஒரு கட்டத்தில் அதைத் தவறு என்று சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. சுவிசேஷ இசையும் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது.

சுவிசேஷ இசையின் (Gospel/Church Music) அடிப்படை நோக்கம் இந்த மூன்றுக்குள் அடங்கியே ஆகவேண்டும். 1. தேவனை மகிமைப்படுத்துவது 2. விசுவாசத்தை பலப்படுத்துவது 3. நற்செய்தியை அறிவிப்பது. மிஷன் அழைப்பை வெளிப்படுத்தும் ஒரு பிரிவும் உண்டு. இதில் குறைவான எண்ணிக்கையில் பாடல்கள் இருப்பதால், அதை தனியாக வைத்துவிடலாம். இவற்றைத் தவிர கிறிஸ்தவ பக்தி இசைக்கு, சுவிசேஷப் பாடல்களுக்கு வேறு நோக்கம் இருக்கவே முடியாது. இருந்தால் அது தேவனுக்கும், வேதாகமத்துக்கும் எதிரானவைகளாகத்தான் இருக்கமுடியும்.

திருமண வீட்டில் கிறிஸ்தவ இசைக்குழுக்கள் இப்படிப் பாடல்கள் பாடுவது எந்த அடிப்படையில்? என்ன நோக்கத்தில்? இரண்டு கோணங்களில் இதை பார்க்கலாம்.

திருமண வீட்டார் சினிமாப்பாடல்களைக் கேட்பது தவறு, பாவம் என்று நினைப்பவர்கள். ஆனால் இசைவிரும்பிகளாக இருப்பார்கள். ஒரே வாய்ப்பு சுவிசேஷப் பாடல்கள் மட்டுமே. அதனால் அப்படி ஒரு குழுவை ஏற்பாடு செய்வார்கள். இதில் இன்னொரு உப பிரிவும் உண்டு. அவர்களுக்கு சினிமாப்பாடல்கள் ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, அல்லது வரும் சில பிரசங்கியார், சுவிசேஷகர்கள் தவறாக நினைப்பார்கள் என்று மற்றவர்களுக்காக இப்படி முடிவு எடுப்பார்கள்.

பல கிறிஸ்தவ இசைக்குழுக்களுக்கு இது முழுநேர/பகுதிநேரத் தொழில். யார் எங்கு அழைத்தாலும் சென்று அற்புதமான கிறிஸ்தவ இன்னிசைப் பாடல்களை இசைப்பார்கள், பாடுவார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் தங்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டுச் செல்வார்கள். இது வழிவழியாக வரும் நடைமுறை.

இது சரியா தவறா என்பதுதான் என் கேள்வி.

சுவிசேஷப் பாடல்களுக்கு மேற்சொன்ன அந்த நோக்கம் மட்டுமே ஏற்புடையது என்றால் இப்படிச் செய்யலாமா? கர்த்தரின் நாமத்தைச் சுமந்து வருகிற இந்த பக்தி/சுவிசேஷ/துதிப் பாடல்களை நாம் கேளிக்கைக்கும், பொழுதுபோக்குக்கும் பயன்படுத்தலாமா? அவை தேவனுக்கு உகந்தவையாக இருக்குமா? வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் ஒழிந்தேபோகாத அந்த வார்த்தைகளை நாம் இதைப்போன்றப் பயன்பாட்டினால் தேவதூஷணம் செய்யலாமா?  அவர் நாமத்தை, மகிமையை வியாபாரப்பொருளாக ஆக்கலாமா? அவர் நாமத்தை விற்று நாம் பணம் சம்பாதிக்கலாமா?  Is Jesus for sale?

வேதாகம அடிப்படையில் என்னுடைய ஐயங்கள்:

  1. “தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” என்பது கற்பனை.                     உன்னதமான, சர்வ கனமும், மகத்துவமும், மேன்மையும் பொருந்திய தேவனின் நாமத்தை இப்படிப் பொழுதுபோக்கில் உதாசீனம் செய்யலாமா? பரிசுத்தமான அந்த நாமத்தை இப்படி சந்தடியும், உல்லாசமும் நிறைந்த இடங்களில், கொஞ்சமும் பயபக்தி இல்லாமல் பயன்படுத்தலாமா? இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கும்போது கூட, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக!” என்று இந்தப் பயபக்தியையும், பரிசுத்த நினைவுகூறுதலையும்தானே வலியுறுத்திச் சொன்னார். இந்த மூன்றாம் கற்பனையின் மறுபாதியை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவரது அந்த வலிய எச்சரிக்கையின் வீரியத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
  2. இயேசு கோபப்பட்டதாக வேதாகமம் பதிவுசெய்திருப்பது வெகுசில இடங்கள் மட்டுமே. அதில் முதன்மையானது நாமெல்லாரும் அறிந்த தேவாலயத்தில் புறாக்களை விற்றவர்களை விரட்டியடித்த சம்பவம்.                                                                                                                                       அவர்கள் விற்றது அதே ஆலயத்தில் பலி காணிக்கைகளைச் செலுத்துவதற்குக்கான ஆலய வழிபாட்டு முறைக்குத்தான். ஆனாலும் இயேசு அவர்களைக் கோபம்கொண்டு விரட்டியடித்தார். ஏனென்றால், அவர்கள் அதைச் சேவையாகச் செய்யாமல், தொழிலாகச் செய்தார்கள். நியாயவிலைக்கு விற்காமல், கூடுதல் விலைக்கு விற்றதாக வேத விற்பன்னர்கள் சொல்கிறார்கள். சர்வ வல்லவரின் நாமத்தை நான் என் லாபத்துக்குப் பயன்படுத்தலாமா? அவர் நாமத்தை வைத்து, அல்லது விற்று நான் சம்பாதிக்கலாமா? அன்றாடம் இடம் மாறி மாறி, ஓடி ஓடி, ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நான் பாடுவது, இசைப்பது தேவனைத் துதித்து ஆராதிக்கவா, அல்லது என் வங்கிக்கணக்கை அதிகரிக்கவா? எனக்கும், என் ஆண்டவருக்கும் மட்டுமே தெரியும்.

திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற பொழுதுபோக்கு கூடுதல் இடங்களில் தேவனுடைய நாமத்தை, எந்த தேவசிந்தனையும் இல்லாமல் தொழிலாக நான் செய்துகொண்டிருக்கும் இந்தக் காரியம் சரிதானா? என் மனதுக்குள் நான் கேட்டு இதற்கான விடைகளை வேதத்தின் மூலமும், ஜெபத்தின் மூலமும் நான் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Christian Music is NOT entertainment! NOT career! NOT hobby!

It is NOT for my pleasure, satisfaction or pride!

IT IS FOR GOD’S GLORY! FOR THE GLORY OF THE MOST AWESOME AND HOLY GOD!

Gospel Music Videos

(Addressed to Christians)

YouTube has been put to tremendous use by the gospel musicians out here than anyone else. I opine with respect to the scene in Tamilnadu, which is culturally relevant to me.

Basically, gospel music videos are of two kinds. One which dramatises or narrates a story based on the content of the song and the other one, the fancied kind, showcasing the band. No doubt, the second one is the most-sought after due to the immense popularity it brings to the concerned artistes.

What’s the purpose of such gospel music videos? The claim would undoubtedly be “For the Glory of God.” But, do they in practicality, glorify God?

Today’s talented young gospel musicians beautifully capture the recording moments in a hi-tech studio ambiance with various creative embellishments in lighting, camera angles, using filters, slow motion techniques, editing gimmicks, extreme close-ups, zoom-ins, pans and tilts and even magnificent aerial shots with drones when they are outdoor videos. Every trick that’s done out there in the commercial industry is rehashed here. Some are quite impressive, to be honest. The comments that pour in beneath the YouTube videos are the evidence.

Every artiste – the guitarist, bassist, keyboardist, drummer, percussionist, flautist and the lead singer and the backing vocalists get their due exposure in the videos and are generously praised and admired in the comments below. The cameraman and the editor don’t fail to get their recognition either.

In the commercial world, when an artiste appears in a video, he/she either tries to earn popularity or encashes on the existing one. The whole purpose of making attractive music videos is to sell the song.

But, do they apply to Gospel music which has to either preach Gospel, edify Church or Glorify God? Where there’s no place for revenue, stardom, popularity, sales strategy, fan base etc gospel music videos don’t make sense but on the contrary go against God’s principles.

“I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.” Isaiah 42:8

God’s divine claim is that HE will not give his glory to someone else. We can understand from the context that the glory that he does not share with anyone else is the glory that belongs to the Creator God – the Judge of all mankind.

If one reads the hundreds of comments beneath YouTube videos, they can realise how every artiste and aspect of the video is lavishly appreciated and praised and adulated. There are two things that concern us here. The message that has to reach people through that song gets diluted and distracted and the other the most perilous aspect, stealing glory that is absolute sovereignty of God.

In my view:

  • Christian musicians/singers must refrain from making self-seeking music videos.
  • Pictures of band in the beginning/end would be fine, just to convey ownership.
  • Videos of singing at gathering, assembly, congregations and all ok.
  • Every video must have lyrics on screen and an English translation in description.
  • Lyric videos serve better purpose, with suitable graphics to make them effective.
  • Choreographed videos are to be absolutely stopped. They’re more a mockery.

We should realise that a christian song or video is a gospel material and not something that exhibits your talent or that propagandises you as an artiste. Do not piggyback on God, to promote yourself. Once God’s name is used in a song, it is absolutely his property, created for his purpose, to proclaim the gospel and to magnify Him and Him alone.

Blasphemy by Gospel singers!

(Addressed to Christians)
சமீபகாலமாய தமிழ் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுகிற பல இளைஞர்கள், சினிமாப்பாடலில் உள்ள பல அம்சங்களைக் கடைபிடித்து துதிப்பாடல்களின் தூய்மையையும், உன்னதத்தையும் கறைபடுத்தி வருகிறார்கள். இது நல்லதே அல்ல!

இந்தப் பகிர்வில் ஒரே ஒரு அம்சத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அனிருத் போன்ற இளம் இசையமைப்பாளர்கள் பேச்சுத் தமிழில் பாடுவதைக் கண்டு இவர்களும் அதேபோல வேதவசனங்களை உச்சரிக்க முயல்வது அசிங்கமாக இருக்கிறது. சினிமாப் பாடல்களில் அவை உறுத்தவில்லை, நன்றாகவே இருக்கிறது. ஆனால், துதிப் பாடல்களில் அவை இடறலாக இருக்கின்றன.

குறிப்பாக, “கிருபை” என்கிற சொல்லை “கிருப” என்று பாடி அதை நாகரிகம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இந்த அவலத்தைத் தொடங்கிவைத்தவர் கெர்ஸன் எடின்பரோ. அவரால் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் அவருடைய பாடல்களை அப்படித்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். To corrupt a mass is easy, but to undo is difficult. ஆண்டவரின் வார்த்தைகளை, வசனங்களை, சத்தியங்களை நீங்கள் ஒன்றும் நவீனப்படுத்த வேண்டாம். அவைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதிலும், சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் எளிமைப்படுத்தும் வழிகளைப் பாருங்கள்.

நமது அறிவையும், திறமையையும், நாகரிக ஆசைகளையும் வெளிப்படுத்த தேவனைப் பயன்படுத்த வேண்டாம். ஆண்டவரின் வார்த்தைகளைக் கொச்சைப்படுத்தி தேவதூஷணம் செய்யவேண்டாம்.

WORD GOD!

(Addressed to Christians!)

There’s a big hue and cry among some christians in FB, over my plain comments about a christian song that was tagged to me. Many rejoinders cursed, abused and demeaned me, putting their own christian values to test. Yet, this is not a riposte but delineation of ‘why I said what I said’.

One Ms Sharon Gladstone had questioned my knowledge in music and Tamil which, I shamelessly admit, is very frugal. Incidentally, my comment had only substantiated my present admission. Reading further will tell you how.

‘Christhava Keerthanaigal’ is a treasure for traditional churches, where I grew up ever since my birth. Being part of the choir, could sing most Hymns and Lyrics by heart. Until I remained just a chorister, they were just lyrics to me. But when I was redeemed and became a worshipper, they seemed words with life. A new perspective dawned when every word that I sang and heard meant so much to me, something which I had never experienced.

After 17 years of a roller-coaster christian life, God opened the eyes of my heart to certain things, what I ought and ought not do as a musician, which I have started sharing with the next generation in the form of ‘Christian Music Workshop’.

What I once did as a commercial work, charging money, today I do it free of cost. Any aspect of my gospel music contribution today viz. composing, orchestrating, singing, recording etc, I charge no more. I got it free and I give it free.

I moved out of songs like “Sathai nishkalamai”, “Seer thiriyega vasthe”, “Arumarundhoru sarguru marundhu” which don’t edify me personally nor would they, an unbeliever. I would rather choose “Magizhvom magizhvom”, “Enakkaai jeevan vittavare”, “Yendha kaalathilum yendha nerathilum”.

Every time a song with God’s name/word is sung, it has to serve one of the three purposes of Christian Music (Praise God, Uplift church, Preach gospel), without which it would be just a musical piece.

Several older generation people confide in me that they have never attempted to decipher the meaning of so many “Keerthanais” which they have been singing for generations.  That’s the perilous nature of classical compositions (based in carnatic style and flowery language). They’ll be enticing to our intellect, nice to our ears and soothing to our feelings. If music and poetry can, by itself, do these to us, why need God? The moment our hearts lean towards music, when music takes precedence, God factor becomes redundant. God can’t have a second place. Can He?

Unless we praise and worship God with all our heart and soul and mind and strength, as his commandment promulgates, our musical offering would be unacceptable to God. To accomplish this, every word that we sing and hear should emanate from our lives; lives of success, submission, suffering etc. It should relate to our personal faith. Each one in the church should understand each word of a song, over which a Christian song is built, and not on music as it is generally perceived.

What God taught us how to pray can come in handy here. He said, “And when you pray, do not keep on babbling like pagans, for they think they will be heard because of their many words.” (Mathew 6:7) God delights in our humble and simple supplications and not in pompous and flamboyant ones. 

It’s not music that can kindle us, but the living, double-edged, judging Word of God that must. A christian song is not a creative composition but a confessional communication between the believer and God the father. Christian music is about Words! Words! and Words! Without words there’s no christian music.

These days all movies and TV shows come with sub-titles. Though we can broadly understand the story and content of any such fiction without even knowing the respective languages, the producers are keen that their audiences don’t miss out on any word of their work. When words are given such importance in these entertainments, how much more should we, as worshippers of the Word God, revere them in our prayer and meditation and offerings!

In our personal and private meditations we are free to do anything that our hearts desire. But today, in the technologically connected world, the scenario is tricky. Even without our consent or choice, every assembly, fellowship, worship, gathering etc gets posted on social sites, where huge challenges lie. None of us would know who is destined to watch or hear them. We got to be christianly responsible for every word and action in these media shares. Hearts with several needs might be touched through these.

Let’s sing appropriate, meaningful, comprehensible songs in all our fellowships. Let’s not try to show our skills and abilities but only project God with the words given to us. Do not appreciate any christian musician or any christian song as they are not made to showcase us but glorify God. One has to be benefitted by a christian song and not entertained. Next time you want to tell someone, say “That song was useful to me.”

Let’s not try to publish christian songs to promote ourselves and test our GOD WHO WILL NEVER SHARE HIS GLORY!

Identify the ‘Real Enemy’!

தமிழ்நாட்டில் எல்லாரும் காலங்காலமாய் ஒற்றுமையாகவும், சினேகத்துடனும் வாழ்ந்து வருகிறோம். பல நம்பிக்கைகளையும், பின்னணிகளையும் சேர்ந்த நாம் இதைப்போண்ற பேதங்களை ஒரு பொருட்டாக எண்ணியது கூட இல்லை. நம் நட்பு வட்டாரத்தைக் கொஞ்சம் அலசிப்பார்த்தால் புரியும் நாம் சமத்துவ சனம் என்று.
 
ஆனால் சமீபகாலமாக நம்மில் சிலர் பிரச்சனைகளுக்குக் குரல்கொடுக்கும் பெயரில், பிராமண எதிர்ப்புச் செய்திகளை வெளியிடத் துவங்கியிருக்கிறீர்கள். இது சதிகாரர்களின் வலையில் நீங்கள் விழுந்துவிட்டதற்கான சான்று. இந்த மாநிலத்தைத் துண்டுகளாக பிரித்து உள்ளே நுழையத் திட்டமிட்டிருக்கிற “ஒருசில” அமைப்புகளின் Masterplan அது. அந்த வகையில் அவர்கள் வெற்றியடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
பெரியாரின் சீர்திருத்தங்களை முழுமனதாய் ஆதரிக்கிற நான், பிராமணர் எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. அந்தக்காலத்தில், அவர்களுள் சிலர் வடிவமைத்த சில சமூகவிரோதக் கட்டமைப்புகள் கொடுமையானவைதான். மறுப்பதற்கில்லை. அவற்றை எதிர்க்கவும், மாற்றியமைக்கவும் நாம் பாடுபடவேண்டுமேயன்றி, ஒரு சமூகமாய் அவர்களுக்கு எதிராய் செயல்படுவது அதைவிட மோசமான செயல். அது நம்மை நாமே அழித்துக்கொள்கிற பிற்போக்கான சிந்தனையும் கூட.
 
இத்தனை வருடங்களாய் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாமல் இருந்த “தேசவிரோத” மதவெறி அமைப்புகள் இன்று இந்த அடிமைகள் ஆட்சியின் காரணமாய் ஊடுருவி, பரவத்தொடங்கிவிட்டனர். அவர்களுடை வியூகமே, நம்மை எத்தனை கோணங்களில் பிரித்து, சிதறடிக்க முடியுமோ, அத்தனை வித வலைகளையும் வீசிக்கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவராய் அதற்குள் வெகுளியாய் விழுந்துகொண்டிருக்கிறோம்.
 
அன்றாடம் ஒருவரோடு ஒருவர் நாம் உறவாடிக்கொண்டிருக்கிற நம் சமூக உறவுகள் எல்லாமே நமக்குள் ஒருவர்கள்தான். நமக்குள் எந்த பேதமும் பாகுபாடும் கிடையாது. ஒற்றுமையைக் குலைக்கிற இதைப்போன்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எதிர்ப்பையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அந்த சமூக, தேச விரோதிகளை இனங்கண்டு அவர்களை விரட்டும் வழிகளைத் தேடுவோம்.
 
நல்லவர்களும், கெட்டவர்களும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நான் சார்ந்திருக்கிற கிறிஸ்தவ சமூகத்தில், தேவாலயங்களில் எத்தனையோ தவறான போதகர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். கொலை, கொள்ளை, தீண்டாமை, வெறுப்பு, பாலியல் குற்றங்கள் எல்லாம் இங்கேயும் நிகழ்கின்றன.
 
வஞ்சகர்களிடம் விலகி இருப்போம். மற்ற எல்லாரிடமும் சினேகமாய் இருப்போம். தமிழ்நாட்டுக்கு சோதனையான நேரம் இது. நாம் எச்சரிக்கையோடு, விவேகத்தோடு இல்லையென்றால் நம்மைப் பிரித்து, நம் மண்னை சூறையாடி விடுவார்கள் – நம் ஆட்சியாளர்கள் பேருதவியோடு! ஒற்றுமையே ஒரே வழி! United we stand! Divided we fall!

Blog at WordPress.com.

Up ↑